12 வருடங்களுக்கு பிறகு காரைதீவு பிரதான வீதி வெள்ளக்காடாக காட்சி! பார்வையிட மக்கள் ஆர்வம்.



வி.ரி.சகாதேவராஜா-
டந்த 12 வருடங்களுக்கு பிறகு காரைதீவு பிரதான வீதி வெள்ளத்தின் மூழ்கியுள்ளது.
சேனநாயக்கா சமுத்திரத்தின் வான்கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டதால் இந்த வெள்ளம் பரவுகிறது. 2010 ஆம் ஆண்டில் இத்தகையதொரு வெள்ளம் பரவியிருந்தது.
மக்கள் சிரமத்திற்கு மத்தியில் பயணிப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. வெள்ளிக்கிழமை வெயில் எறித்த காரணத்தால் மக்கள் வீதிகளில் மகிழ்ச்சியாக வெள்ளத்தை கண்டுகளித்தனர்.

போலீசாரின் பாதுகாப்பு நடவடிக்கையும் தொடர்கிறது.

காரைதீவு அக்கரைப்பற்று வீதி காரைதீவு அம்பாறை வீதிகளில் வெள்ளம் பாய்வதால் காலையில் போக்குவரத்துக்கு பொலிசார் அனுமதிக்கவில்லை.
பின்னர் பாரிய வாகனங்கள் செல்ல அனுமதித்தனர்.

இதேவேளை காரைதீவு மாவடி பள்ளி வீதி முற்றாகவே அமிழ்ந்திருக்கின்றது.
பாரிய வாகனங்கள் மாத்திரம் செல்ல போலிசார் அனுமதித்தார்கள்.
மக்கள் வெள்ளம் வெள்ளத்தை பார்ப்பதற்காக சாரி சாரியாக வந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் போக்குவரத்து சிரமமாக இருக்கின்றது.

பொருட்களின் விலையும் விஷம் போல் ஏறி இருக்கிறது. காரைதீவுக்குள் புகுந்த வெள்ளம்இப்பொழுதும் வீடு மனைகளிலேயே நின்று கொண்டிருக்கின்றது.


மக்கள் பலத்த அசௌகரியத்துடன் நாட்களை கடத்துகிறார்கள்


தைப் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் எவ்வாறு எதிர்கொள்வதென்பது புரியாமல் வெள்ளபீதியில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :