இந்துக்கள் குறிப்பாக இந்துமகளிர் சிவனை நினைந்து அனுஸ்ட்டிக்கும் திருவெம்பாவை விரதம் நேற்று(18) திங்கட்கிழமை அதிகாலை ஆரம்பமாகியது.
நேற்று அதிகாலையில் அம்பாறை மாவட்டத்தில் பரவலாக மழை பொழிந்தது. இருந்தும் இந்துக்கள் 4மணிக்கு முன்பதாகவே எழுந்து திருப்பள்ளியெழுச்சி ஊர்வலத்திலும்ஆலய திருவெம்பாவை பூஜைகளிலும் கலந்துகொண்டனர்.
இவ்விரதம் தொடர்ந்து 9நாட்கள் நடைபெற்று 10ஆம் நாளான 27ஆம் திகதி திருவாதிரை தீர்த்தோற்சவம் இடம்பெறும்.
அந்தவகையில் காரைதீவு இந்து சமய விருத்திச்சங்கம் வருடாந்தம் நடாத்திவரும் திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி ஊர்வலம் நேற்று 1ஆம் நாள் திங்கட்கிழமை அதிகாலை நடைபெற்றது.
முதல்நாள் ஊர்வலம் நிறைவுற்றதும் திருவெம்பாவை விசேடபூஜை காரைதீவு கண்ணகை அம்மனாலயத்தில் நடைபெற்றது.
ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் வழிகாட்டலில் சிவஸ்ரீ ரூபன் குருக்கள் பூஜையினை நடாத்தி ஆசியினை வழங்கினார்.
பின்னர் திருவாசகமுற்றோதல் நடைபெற்றது. அதிகாலை வேளைகளில்மக்கள் எழுந்து திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment