இந்திய - சிலோன் நட்புறவு அமைப்பின் சாதனையாளர்கள் கெளரவிப்பு நிகழ்வு கொழும்பில் விமரிசையாக இடம்பெற்றது.



அஸ்ஹர் இப்றாஹிம்-
ந்திய-சிலோன் நட்புறவு அமைப்பும், லங்கா சாதனையாளர் மன்றமும் இணைந்து நடத்திய வருடாந்த நிகழ்வானது கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்றது.

இவ்விழாவில் பல பிரதேசங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான அன்பளிப்பு பொருட்களும் கையளிக்கப்பட்டதுடன், மருத்துவம், புத்தாக்கம், பொலிஸ் சேவையில் பெண் அதிகாரியின் அதிஉச்ச கடமை என பல்துறைகளில் உள்ள ஆளுமைகளை வெளிப்படுத்திய கலைஞர்கள்,மற்றும் சமூக சேவையாளர்களுக்கு விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டனர்.

இவ் விழாவில் பிரதம அதிதியாக பேராசிரியர், கலாநிதி. மது கிருஷ்ணன் அமெரிக்காவின் புகழ்பெற்ற விஞ்ஞானி மற்றும் AUGP/UNUGP USA இன் தலைமை அதிகாரியும் தலைவர் நிறுவனர் அவர்களும், இந்திய சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் எஸ் முத்துராமலிங்கம், இலங்கை அழகி வியானா பீட்டர்ஸ் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் உறுப்பினர்கள், மலையக கலாசார ஒன்றியத்தின் அமைப்பாளர்கள் பல சிவில் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :