பாத்திமா அஸ்லின் தேசிய மட்ட இரண்டாம் மொழி சிங்கள பேச்சுப்போட்டியில் திறமைச் சான்றிதழ் பெற்று சாதனை!.எம்.எப்.றிபாஸ்-
ருதமுனை அல்மனார் தேசிய பாடசாலையின் தரம் எட்டில் கல்வி கற்கும் முஹம்மது ஹம்ஸா பாத்திமா அஸ்லின் தேசிய மட்ட இரண்டாம் மொழி சிங்கள பேச்சுப்போட்டியில் திறமைச் சான்றிதழ் பெற்று சாதனை படைத்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இரண்டிலும் இரண்டாம் மொழி சிங்கள பேச்சுப்போட்டியில் சிறந்த பேச்சாளராக தெரிவு செய்யப்பட்ட இவர் தேசியமட்டப்போட்டியில் கலந்து கொண்டு திறமைச் சான்றிதழ் பெற்றியிருப்பது ஒரு வரலாற்று பதிவாகும்.

தமிழ் மொழியிலான பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டு ஒரு முஸ்லிம் மாணவியாகவிருந்து இவ்வாறான திறமைகளை வெளிக்காட்டியிருப்பது ஓர் அபரிமிதமான செயற்பாடாகும்.

தரம் எட்டில் கல்வி கற்கும் இவர் சிங்கள மொழி மீது உள்ள ஆர்வம் மற்றும் பற்று காரணமாக சிங்கள மொழியை சரளமாக பேசக்கூடிய ஒருவராக இம்மாணவி திகழ்கிறார்.

பாடசாலையில் நடைபெறும் பல்வேறு பேச்சுப்போட்டிகளில் பங்குபற்றி தமது திறமைகளை வெளிக்காட்டி வரும் இம்மாணவி கடந்த வெள்ளிக்கிழமை(22) அம்பாரை பண்டார நாயக்க மகளீர் மகா வித்தியாலயத்தின் காலை ஆராதனை நிகழ்வின் போது பாடசாலையின் நிருவாகத்தின் அழைப்பின் பேரில் விஷேட சிங்கள மொழியிலான சொற்பொழியொன்றை ஆற்றியிருந்தார். இச்சொற்பொழிவு தேசிய நல்லிணக்கத்தை வழியுருத்தும் வகையில் அமைந்திருந்ததுடன் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களது பாராட்டை பெற்றதும் சிறப்பம்சமாகும்.

காலை ஆராதனையின் போது கருத்து தெரிவித்த இப்பாடசாலையின் அதிபர் டப்ள்யு.ஈ. சிறியானி விஜயகோன் பிறப்பால் ஒரு முஸ்லிமாகவிருந்தும் சிங்களம் பேசாத ஒரு பாடசாலையில் கற்று இவ்வாறு இயல்பாக சிங்களவர்களை விடவும் திறமையாக சிங்களத்தை மொழிவது இம்மாணவியின் உள்ளார்ந்த திறமையை எடுத்துக்காட்டுகிறது.

தாய்நாட்டின் அற்புதங்கள் பற்றி அர்த்தமுள்ள உரையொன்றை மாணவி பாத்திமா அஸ்லின் நிகழ்த்தினார்.அதனை தொடர்ந்து அனைவரினதும் வேண்டுகோளுக்கினங்க "குழந்தைகளே எதிர்கால தலைவர்கள்" என்ற தலைப்பில் மற்றுமொரு உரையை நிகழ்த்தி பலரது வாழ்த்துக்களையும் பெற்றார்.

பாடசாலையில் மாணவர் பாராளுமன்ற உறுப்பினராகவும் காணப்படும் இவர் தமிழ்தினப் போட்டி, ஆங்கில தினப்போட்டி, மற்றும் மீலாதுன் நபிவிழா போட்டிகளில் , மாகாண, மாவட்ட ரீதியில், பல்வேறு இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் கலந்து கொண்டு பல வெற்றிகளையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ள இம்மாணவியின் திறமை பாராட்டுக்குரியதாகும்.இவர் எதிர் காலத்தில் சிங்கள மொழி,ஆங்கில மொழிகளில் மிகவும் பாண்டித்தியம் உள்ள ஒருவராக திகழ்வார் என்பதில் ஐயமில்லை.
இவர் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா மற்றும் கிராம நிலதாரியாக கடமையாற்றும் திருமதி எம்.ஐ.பாத்திமா ஷர்மதா ஆகியோரின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :