மட்டக்களப்பு விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி விவசாய போதனாசிரியர் பிரிவின் ஒழுங்குபடுத்தலின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு விவசாய உற்பத்தி மற்றும் தயாரிப்புக்கள் தொடர்பில் விழிப்புணர்வு வழங்கும் நிகழ்வு காத்தான்குடி ஸாவியா பெண்கள் பாடசாலையில் நடைபெற்றது.
விவசாய பேராசிரியர் ஜனாபா.முபீதா றமீஸ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதி விவசாயப் பணிப்பாளர் திரு.வி.பேரின்பராசா பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் உதவி விவசாய பணிப்பாளர் ( மட்- மத்தி வலயம்) திரு.என்.கணேச மூர்த்தி மற்றும் பாடசாலை அதிபர் எஸ்.எம்.முஜீப் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களினதும் விவசாய திணைகள உத்தியோகத்தர்களினாலும் பாரம்பரிய உணவுகள் தயாரிக்கப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 comments :
Post a Comment