குருநாகல் கல்வி வலய, பறகஹதெனிய மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு அண்மையில் அதிபர் ஐ. அப்துல் ரஹ்மான், தலைமையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் எஸ். அப்துல் ரஹ்மான் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் பாஹிம் அமானுல்லாஹ் உள்ளிட்ட குருநாகல் கல்வி வலயத்தின் உதவிக்கல்வி பணிப்பாளர் சலாஹூத்தீன் மாவத்தகம கோட்டக்கல்வி அதிகாரி காஞ்சனா சமன்மளி ஆகியோர் கலந்து கொண்டு மாணவத் தலைவர்களுக்கான சின்னங்களை அணிவித்து வைத்தனர்.
இந்நிகழ்வில் பாடசாலை ஒன்றின் கல்விசார் செயற்பாடுகளை முறையாக கொண்டு நடத்துவதன் அவசியம், தலைமைத்துவ பண்புகளைக் கொண்ட மாணவர்களை உருவாக்குதல், பொறுப்புக்களை சரியாக நிறைவேற்றுதல், ஆளுமை விருத்திப்பண்புகள் குறித்த அம்சங்கள் அடங்கிய உரைகள் நிகழ்த்தப்பட்டதோடு மாணவர்களின் மேடை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இதன் போது பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி, பழைய மாணவர் சங்கங்களின் உறுப்பினர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment