அருளானந்தம் ஞாபகார்த்த பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிகள் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி உள்ளக விளையாட்டு அரங்கில் மிகவும் கோலாகலமான முறையில் இடம் பெற்றது..
இப்போட்டியின் அதிதிகளாக எஸ்கோ அமைப்பின் செயலாளர் திரு சி.நந்தகுமார் மற்றும் விபுலானந்த மத்தியகல்லூரியின் முதல்வர்.திரு எம்.சுந்தரராஜன் அவர்களும் உடற்கல்வி ஆசிரியர் திரு ஜே.சோபிதாஸ் அவர்களும் கலந்து சிறப்பித்ததோடு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்தனர் .
மேலும் அம்பாறை மாவட்ட 13 வயதுக்குட்பட்ட பூப்பந்தாட்டக் குழுவில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மிகவும் பெறுமதி வாய்ந்த பாதணிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
0 comments :
Post a Comment