தற்போது நடைமுறையிலுள்ள சபரிமலை கோயில் சன்னிதானத்தில் அத்தாலை பூஜை எனப்படும் அடுத்த ஜால பூஜையின் பின் இரவு நடை சாத்தப்படுகின்றபோது பாடப்படுகின்ற ஹரிவராசனம் பாடல் இயற்றப்பட்டு 2020 ஆம் ஆண்டுடன் நூற்றாண்டுகள் முடிவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக உலகிலுள்ள அனைத்து ஐயப்ப சங்கங்கள் மற்றும் குருசுவாமிமார்கள், சுவாமிமார்கள் ஒன்றியங்கள் அனைத்துமே இந்த விழாவை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
இருப்பினும் இவ்வருடம் இலங்கையிலுள்ள மலையகத்தின் ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்த்தானத்தில் அகில இலங்கை மலையக ஐயப்பன் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஹரிவராசனம் நூற்றாண்டு விழா மிகவும் கோலாகலமான முறையில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இவ்விழாவில் சபரிமலை கோயில் சன்னிதானத்தில் கடந்த ஒரு வருடகாலமாக ஐயப்ப சுவாமிக்கு பூஜை செய்து வந்த மேல்சாந்திமார்கள் கலந்துக்கொண்டு இவ்விழாவினை சிறப்பிக்கவுள்ளனர். அத்துடன் திரு.அரவிந்த் சுப்ரமணியம் அவர்களின் சிறப்பு சொற்பொலிவும் இடம்பெறவுள்ளது.
ஆகவே அனைத்து மூத்த குருசுவாமிமார்கள், குரு சுவாமிமார்கள், ஐயப்ப சுவாமிமார்கள் மற்றும் பக்த மெய்யடியார்கள் அனைவரைவும் கலந்து இவ்விழாவினை சிறப்பிக்குமாறு அகில இலங்கை மலையக ஐயப்பன் ஒன்றியத்தினர் கேட்டுக்கொள்கின்றார்கள்.
0 comments :
Post a Comment