அட்டாளைச்சேனை அரபா வித்தியாலய டீ- சேர்ட் அறிமுக விழா : சிறப்பு விருந்தினர்களாக பைசல் காசிம் எம்.பியும், கிழக்கின் கேடயம் எஸ்.எம்.சபீஸும்நூருல் ஹுதா உமர்-
மு/அக்/அட்டாளைச்சேனை அரபா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் நடாத்தும் அரபா பிரீமியர் லீக் சுற்று தொடருக்கான டீ- சேர்ட் அறிமுக நிகழ்வும் பழைய மாணவர்கள் சங்க சீருடை அறிமுகமும் பழைய மாணவர்கள் சங்க ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பைசல் காசிம் மற்றும் கிழக்கின் கேடய பிரதானியும் அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன முன்னாள் தலைவருமான எஸ்.எம்.சபீஸ் அவர்களும் கலந்து கொண்டனர். மேலும் அப் பாடசாலையின் பழைய மாணவர்களான கிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில், பொத்துவில் பிரதேச செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர், அப்பாடசாலையின் அதிபர் மற்றும் முன்னாள் அதிபர்கள், கல்வி அதிகாரிகள், 300க்கும் அதிகமான பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :