கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அமெரிக்க சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பினால் நன்கொடைவி.ரி.சகாதேவராஜா-
ல்முனை ஆதார வைத்தியசாலைக்கு பல்வேறு வழிகளில் உதவிக்கரம் நீட்டிக்கொண்டிருக்கும் அமெரிக்க சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பினால் (International Medical Health Organization) மீண்டும் நன்கொடை வழங்கியுள்ளது.

வைத்தியசாலையின் நோயாளிகளுக்கும், நோயாளிகளின் உதவியாளர்களுக்காகவும் 250 பிளாஸ்ரிக் கதிரைகள் மற்றும் 300 தலையணைகள் என்பன வழங்கப்பட்டது.

ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி இரா. முரளீஸ்வரனின் வேண்டுகோளின் பேரில் அமெரிக்க சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான எல்.பிரதீப்காந்த் அவர்களினால் வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் வைத்து நேற்று காலை கையளிக்கப்பட்டது.

மேலும் இந்த நன்கொடை கையளிக்கும் நிகழ்வில் வைத்தியசாலை நீரிழிவு முகாமைத்துவ வைத்தியர் டாக்டர் கே. ரிஷிகேஸ், தாதிய பரிபாலகர் என். சசிதரன், நிர்வாக உத்தியோகத்தர் ரி.தேவஅருள், திருமதி. கே. மனோஜினி (நீரிழிவு முகாமைத்துவ தடுப்பு பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :