2023 ஆம் வருடத்துக்கான இறுதி முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் மாவட்ட ரீதியான பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராய்வு



அஸ்ஹர் இப்றாஹிம்-
வ்வருடத்திற்கான மூன்றாவதும் இறுதியுமான மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.உமாமகேஸ்வரன் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ குலசிங்கம் திலீபன், வினோ நோகராதலிங்கம்,வடமாகாண பிரதம செயலாளர் ஆகியோரின் பங்கேற்போடு( 27) முல்லைத்தீவு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

குறித்த அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் 1985 ஆம் ஆண்டிற்கு பிற்பாடு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய வனவளத் திணைக்களத்தினால் அடையாளமிடப்பட்ட காணிகளை விடுவிப்பது சம்பந்தமாகவும் ,வீதி அபிவிருத்தி சம்பந்தமாகவும், கல்வி , சுகாதாரம்,மீன்பிடி, வனவளம், நீர்ப்பாசன திணைக்களம்,போக்குவரத்து,உணவு உற்பத்தி, நகர அபிவிருத்தி, அனர்த்த முகாமைத்துவம் இது போன்ற இதர விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டு தீர்வுகளும் எட்டப்பட்டன.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்ட எதிர்கால நகரத் திட்டமிடல் சம்பந்தமான காணொளி ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டது.

குறித்த மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் மாகாண பணிப்பாளர்கள், பிரதேச செயலகங்களின் பிரதேசச் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், முப்படை பிரதானிகள், அரச பதவிநிலை உத்தியோகத்தர்கள் , என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :