மூதூர் பிரதேச கலாசார விழா - 2023எம்.ஏ.ஏ.அக்தார்-
மூதூர் பிரதேச கலாசார விழா மிகச்சிறப்பான முறையில் பிரதேச செயலாளர் எம்.பீ. எம். முபாறக் அவர்களின் தலைமையில் தோப்பூர் உப பிரதேச செயலக பிரிவில் மூதூர் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

மூதூர் பிரதேச கலாசார விழாவின் பிரதம விருந்தினராக மாவட்ட செயலாளர் திரு. சமிந்த கெட்டியாராச்சி அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள், நீர் பாசன அமைச்சின் பணிப்பாளர் கே. எம். எம். மர்சூக் , மூதூர் வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி இஷட்.எம்.எம். நளீம் , தோப்பூர் வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் என்.எம். கஸ்ஸாலி , மூதூர் பிரதேச சபை செயலாளர் திருமதி எஸ். சத்தியஜோதி, மூதூர் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு. கே.ஜி.ஜே.யு. சோமநுவர ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் , மூதூர் உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், கிராம நிருவாக உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமை முகாமையாளர், முன்னாள் மூதூர் பிரதேச கலாசார செயலாளர், சர்வ மத தலைவர்கள், கலாசார அதிகாரசபை செயலாளர், சிரேஷ்ட கலைஞர்கள், இளம் கலைஞர்கள், தோப்பூர் கலை இலக்கிய பேரவை கலைஞர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேச வாசிகளும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்கள்.

மூதூர் பிரதேச செயலாளர் அவர்களினால் மாவட்ட செயலாளர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் மூதூர் பிரதேச கலாசார விழாவில் வெளியிடப்பட்ட முத்து மலர் சஞ்சிகையின் முதற்பிரதியினையும் மாவட்ட செயலாளர் அவர்களுக்கு வழங்கி வைத்தார்கள்.

மூதூர் பிரதேசத்தில் பல்வேறு துறைகளில் திறமைகளை வெளிக்கொணர்ந்த சிரேஷ்ட கலைஞர்களுக்கும், இளம் கலைஞர்களுக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டது .

பிரதேச கலாச்சார விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் (திறந்த, பாடசாலை மட்டங்களில் ) கலந்துகொண்டு வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களும், நினைவுச் சின்னங்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :