காத்தான்குடி பிரதேசத்தில் மிகச்சிறப்பாக இயங்கி வரும் மத்தியஸ்த சபை காத்தான்குடி பிரதேச மக்களின் பிணக்குகளை சுமுகமாக தீர்த்து இணக்கப்பாடு காணப்படும் வகையில் செயற்பட்டு வருகின்றது.
அந்த வகையில் மிகவும் இலகுவான முறையில் அவதானமாக நிதானமாக இரு சாராரும் தங்களின் பிணக்குகள் தீர்வு காணப்படுவதன் மூலம் சகவாழ்வுக்கு வழி வகுக்கப்படுகிறது.
அங்கத்தவர்களின் ஒற்றுமை கருதி காத்தான்குடி மத்தியஸ்த சபையின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு அண்மையில் காத்தான்குடி கடலோரம் பீச் வைட் ஹவுஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கடந்த காலங்களில் மத்தியஸ்தர்களாக கடமையாற்றி புதிய தெரிவில் இடம் பெறாத மத்தியஸ்தர்களின் சேவை நலன் பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி விருந்தளித்து கௌரவிக்கப்பட்டனர்.
0 comments :
Post a Comment