ஒருநாள் இயற்கை முறை வீட்டுத்தோட்டச் செயலமர்வுநூருல் ஹுதா உமர்-
பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையத்தின் நிதியனுசரனையில் நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகத்தினால் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட கமு/சது/ இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 78 மாணவர்களுக்கான ஒரு நாள் இயற்கை விவசாய வீட்டுத் தோட்டச் செயலமர்வு நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகத்தின் தலைவர் வினோஜ்குமார் தலைமையில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் எஸ்.தயாகரன் பிரதி அதிபர் என்.சசிகரன் ஆகியோரின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி எம். முபாரக் அலி மற்றும் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் என்.பரமதயாளன் ஆகியோர்களும் விசேட அதிதிகளாக அம்பாறை மாவட்ட இளைஞர் சம்மேளனத்தின் தலைவர் எம்.எஸ்.எம். ரிப்கான் அவர்களும், கிழக்கிழங்கை சொற்பொழிவாளர் ஒன்றியத்தின் தலைவரும், சிவநெறி அறப்பணி மன்றத்தின் தலைவருமான சைவப் புலவர் கஜேந்திரா அவர்களும், கிழக்கிழங்கை சொற்பொழிவாளர் ஒன்றியத்தின் உதவிச் செயலாளர் சனாதனன் அவர்களும், சம்மாந்துறை இளைஞர் சேவை அதிகாரி எம். எம். சமீர் அவர்களும், அட்டாளைச்சேனை இளைஞர் சம்மேளனத்தின் செயலாளர் சகரான் அவர்களும், சம்மாந்துறை எச்.என்.வீ வங்கியின் நுன் நிதி முகாமையாளர் சஞ்ஜீவன் அவர்களும் கலந்து கொண்டனர்.


இச் செயலமர்வில் போது மண் பண்படுத்தல், விதைகள் நடுகை, வினைத்திறனான நீர்ப்பாசனம், வீட்டுத் தோட்ட முகாமைத்துவம், பீடைக்கட்டுப்பாடு முறைகள், நிலைபேறான வீட்டுத் தோட்ட முயற்சியாண்மை போன்ற செயற்பாடுகளை மாணவர்களுக்கு செயன்முறையாக காட்டப்பட்டன. இதனை சுலக்ஷன், மயூராபதி, மோகன்தாஸ் மற்றும் அகனாப் ஆகியோர் வளவாளர்களாக கலந்து சிறப்பித்தனர். இதன் போது 78 மாணவர்களுக்கு வீட்டுத் தோட்டம் செய்வதற்கான பயிர்கன்றுகள் மற்றும் விதைகள் வழங்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :