அஸ்ஹர் இப்றாஹிம்-
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் .ஐ எல் .எம். றிபாஸ் அவர்களின் வழிகாட்டலுக்கும் ஆலோசனைக்கும் அமைவாக நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் (07 )கிளினிக் பார்மசி திறந்து வைக்கப்பட்டது
நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் .எம்.பீ அப்துல் வாஜித் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பணிமனையின் பிரதி பணிப்பாளர் டொக்டர் திருமதி ஸக்கிலா இஸ்ஸதீன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த அலகினை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்தியர்கள் ,சுகாதார உத்தியோகத்தர்கள் உட்பட கல்முனை ஆயுர்வேத பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம் ஏ நபீல் அவர்களும் பிராந்திய மேற்பார்வை மருந்தாளர் திருமதி இந்திரகுமார் அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment