சுகாதாரத்துறையில் ஊடகத்தின் பங்கு மிகப்பிரதானமானது: வைத்திய அத்தியட்சகர் எம்.பி.அப்துல் வாஜித் தெரிவிப்புஆதம்-
நோயாளர்களை பராமரித்து அவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்குவது வைத்தியசாலையின் மிக முக்கிய பணியாகும். இருந்த போதிலும் வைத்தியசாலைகளின் சேவைகளையும் சிறந்த செயற்பாடுகளையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கும் ஊடகத்தின் பங்கு மிகப்பிரதானமானது என நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.பி.அப்துல் வாஜித் தெரிவித்தார்.

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் ஊடகம் மற்றும் வெளியீட்டு பிரிவு, டிஜிடல் சுகாதார மையம், சுகாதார மேம்பாட்டு பிரிவு ஆகியவற்றை அங்குரார்ப்பணம் செய்து திறந்து வைக்கும் நிகழ்வு வைத்திய அத்தியட்சகர் தலைமையில் சனிக்கிழமை (18) இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வைத்தியசாலைகளில் நோயளர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுவதுடன், விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள், பயிற்சி கருத்தரங்குகள், சுகாதார மேம்பாடு என பல்வேறு சேவைகள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான நிலையில் வைத்தியசாலைகளின் ஊடக மற்றும் வெளியீட்டு பிரிவு சிறப்பாக இயங்குமானால் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு விடயங்களை கொண்டு சேர்க்க முடியும்.

குறிப்பாக நிந்தவூர் வைத்தியசாலையின் சுகாதார சேவைகள் சிறந்த செயற்பாடுகளை பிரதேச மக்கள் மத்தயில் கொண்டு செல்ல வேண்டிய பாரியு பொறுப்பு எமக்குள்ளது. அதற்காகவே இந்த பிரிவினை ஏற்படுத்தியுள்ளோம். எமக்குள்ள வரையறைகளை பேணி, இதனை முறையாக செயற்படுத்துவோமானால் இப்பிராந்திய மக்கள் பெரிதும் நன்மையடைவர்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக, நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் குறித்த பிரிவுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதது என்றார்.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார தகவல் முகாமைத்துவ பிரிவின் பொறுப்பு அதிகாரி டொக்டர் ஐ.எம்.முஜீப், நிந்தவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் கே.எம்.றயீஸ், டொக்டர் மாஹிர், நிந்தவூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் எம்.ஏ.எம்.றசீன், நிர்வாக உத்தியோகத்தர் எம்.எஸ்.வி.வஜிதா உள்ளிட்ட சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது டிஜிடல் சுகாதாரம், தகவல் அறியும் சட்டம், ஊடகமும் வெளியீடும், எனும் தலைப்பில் விசேட கருத்தரங்கொன்றும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :