திருகோணமலையில் உள்ள பழைய டச்சு கட்டிட அபிவிருத்தி! அமைச்சர் பிரசன்னவினால் அமைச்சரவை பத்திரம்முனீரா அபூபக்கர்-

Ø திருகோணமலையில் உள்ள பழைய டச்சு கட்டிடத்தின் காணி பகுதியை சுற்றுலா அபிவிருத்தி திட்டத்திற்காக நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு மாற்றுவதற்கு அமைச்சர் பிரசன்னவினால் அமைச்சரவை பத்திரம்.

Ø நகரத்தில் பொது வசதிகளை மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகள்.

Ø உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு கவர்ச்சியான நகரத்தை உருவாக்க தேவையான பொழுதுபோக்கு வசதிகள், சுகாதார வசதிகள் மற்றும் பல்பொருள் வணிக வளாகம்.

திருகோணமலை நகரில் பழைய டச்சு கட்டிடம் அமைந்துள்ள காணியை சுற்றுலா அபிவிருத்தி திட்டத்திற்காக நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு மாற்றுவதற்கான அனுமதியை பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவை பத்திரத்தை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சமர்ப்பித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தின் ஒரு பகுதிக்கான பெருநகர அபிவிருத்தித் திட்டத்தை ஏற்கனவே நகர அபிவிருத்தி அதிகாரசபை தயாரித்து 1534/8 என்ற விசேட வர்த்தமானி மூலம் வெளியிட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். வணிக மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் திட்டத்தின் கீழ் உள்ள பகுதி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

கிழக்கு மாகாணத்தின் தலைநகரம் திருகோணமலை. நிலாவெளி கடற்கரை, மார்பிள் கடற்கரை, இயற்கை துறைமுகம், பிரடெரிக் கோட்டை மற்றும் நகரத்தில் உள்ள பல தொல்பொருள் இடங்கள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடங்களாக அமைந்துள்ளது.

திருகோணமலைக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, நகரின் பொது வசதிகளை மேம்படுத்துவது அவசியம். அதற்காக திருகோணமலை இன்னர் ஹார்பர் வீதியில் அமைந்துள்ள பழைய டச்சு கட்டிடத்தை பயன்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை திட்டமிட்டுள்ளதாகவும், அது எவ்வித பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படாமல் உள்ளதாகவும் அமைச்சரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டிடத்தின் புராதனத் தன்மையைப் பாதுகாத்து திருத்தற் பணிகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக திருகோணமலைக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பொழுதுபோக்கு வசதிகள், நவீன உணவகங்கள், ஹோட்டல்கள், நகர அலங்காரம் மற்றும் சுகாதார வசதிகள் மற்றும் பல்பொருள் வணிக வளாகம் என்பன இதன் கீழ் மேம்படுத்தப்படும் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :