முடிவுக்கு வந்தது பரத நாட்டிய விவகாரம்!



அஷ்ரப் ஏ சமத்-
தங்கள் மற்றும் கலாச்சார விழுமியங்கள் நிந்திக்கப்படுவதை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கண்டித்ததுடன் அதனை ஹிந்து குருக்களுடன் கலந்துரையாடி - சமாதானத்துக்கு கொண்டு வந்து; அதனை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் நடைபெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்தனர்

இன்றைய ஊடக ச்நதிப்பில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா செயலாளர் அஷ்சேக் அர்க்கம் மௌலவி, உதவிச் செயலாளர் தாசீம் மௌலவி, ஹிந்துக் குருக்கள் சார்பாக வைத்தியேஸ்வரா குருக்கள், சிவராம் கிருஸ்ன குருக்கள், சிவசிறி, தர்கா சர்மா குருக்கள் ஆகியோறும் கருத்துக்கள் தெரவித்தனர்

இவ்விடயத்தில் இரண்டு மதங்கள் சம்பந்தாக ஒன்று கூடி அதனை ஒரு முடிவுக்கு கொண்டுவந்துள்ளோம். குறித்த விடயத்தினை உடன் செயல்பட்டு சம்பந்தப்பட்ட மௌலவி மண்னிப்பு கேட்டு அவர் தனது தவறை தாங்கள் ஏற்றுக் கொள்வதாகவும் இவ்விடயத்தில் தங்கள் எழுதிய கடிதம் சார்பாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ஆலோசனை நடத்தி மதங்கள் மற்றும் கலாச்சார விழுமியங்கள் விடயத்தில் ஒரு ஜக்கியத்திற்கு வந்துள்ளதாகவும் குருக்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

குறித்த ஊடக மாநாட்டில், அகில இலங்கை ஜமமியத்துல் உலமா செயலாளர் அர்ககம் மௌலவி கருத்து தெரிவிக்கையில்;

கடந்த 2023.11.09. ஆம் திகதி முஸ்லிம் மதப்போதகர் ஒருவரினால் பரத நாட்டியம் தொடா்பாக வெளியிடப்பட்ட காணொளியையும் பின்னர் அது தொடர்பில் தான் மன்னிப்பு கேட்பதாக வெளியிட்ட காணொளியையும சமூக வலைத்தளங்களில் காணக்கிடைத்ததுடன் குறித்த மதபோதகரினால் தெரிவிக்கப்பட்ட கருத்து நாட்டில் உள்ள இந்து மக்களின் மனதை புண்படுத்தியுள்ளதை அவதானிக்கின்றோம்.

இவ்வாறு மதம் மற்றும் கலாச்சார விழுமியங்கள் நிந்திக்கபடும் வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டிருப்பது இஸ்லாமிய வழிகாட்டலுக்கு முரணானதும் கண்டனத்துக்குரியதுமாகும்.
அல்லாஹ் தாஆலா அல்குர்ஆனினல் கூறுகின்றான் நபியே உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக (16”125)

எனவே மேற்குறிப்பிட்ட அழகிய போதனைகளை தமது வாழ்வில் கடைப்பிடிக்குமாறும் வேண்டிக் கொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :