நாபீர் பெளண்டேசன் சாய்ந்தமருது ஜீ. எம். எம். பாடசாலைக்கு ஒரு தொகுதி "பிளாஸ்டிக்" கதிரைககள் அன்பளிப்பு!பிராந்தியத்தில் மிக நீண்ட காலமாக பல்வேறு உதவு திட்டங்களினூடாக தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு காலடிக்குச் சென்று உதவிகளை செய்துவரும் நாபீர் பெளண்டேசனின் ஸ்தாபகரும் சமூக சிந்தனையாளருமான பொறியியலாளர் உதுமாங்கண்டு நாபீர் அவர்கள் இன்று 2023.11.15 ஆம் திகதி சாய்ந்தமருது ஜீ. எம். எம். பாடசாலைக்கு ஒரு தொகுதி "பிளாஸ்டிக்" கதிரைககள் அன்பளிப்புச் செய்தார்.

சாய்ந்தமருது கமு/ கமு/ ஜீ.எம்.எம். பாடசாலை நிறைவேற்று அபிவிருத்திக் குழுவின் செயலாளர் பொறியியலாளர் எம்.ஐ.எம்.றியாஸ் விடுத்த கோரிக்கையை ஏற்று இன்று பாடசாலைக்கு விஜயம் செய்த நாபீர் பெளண்டேசன் தலைவரும் பொறியியலாளருமான உதுமான்கண்டு நாபிர் அவர்கள், பாடசாலையின் பல தேவைகளைக் கேட்டறிந்ததோடு உடனடித் தேவையாக இருந்த ஒரு தொகுதி "பிளாஸ்டிக்" கதிரைகளைப் பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்தார்.
மிகவும் அத்தியவசியமாக இருந்த குறித்த கதிரைகளை அன்பளிப்பைச் செய்த நாபிர் பெளண்டேஷன் தலைவர் உதுமான்கண்டு நாபிர் அவர்களுக்கு பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.இல்லியாஸ், உதவி அதிபர் M.A.C.L.நஜீம், நிறைவேற்று அபிவிருத்திக் குழு, பாடசாலை நிர்வாகம் மற்றும் பெற்றோர்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :