கொழும்பு,பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மாணவன் ரிஷியுதன் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தால் பாராட்டி கெளரவிப்பு



அஸ்ஹர் இப்றாஹிம்-

லங்கை பாடசாலைகள் கிறிக்கட் சம்மேளனம்,கல்வியமைச்சுடன் இணைந்து நடாத்திய அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான டிவிஷன் ii கடினபந்து கிறிக்கட் சுற்றுப் போட்டியின் பத்தரமுல்ல ஜயவர்த்தன அணிக்கு எதிரான போட்டியில் இந்துக் கல்லூரி மாணவன் செல்வசேகரன் ரிஷியுதன் 9.4 ஓவர்கள் பந்து வீசி ஓட்டம் எதுவும் கொடுக்காமல் 8 விக்கட்டுக்களை கைப்பற்றி பெரும் சாதனை யொன்றை நிலைநாட்டியிருந்தார்.

இம்மாணவன் எதிர்காலத்தில் தலைசிறந்த விளையாட்டு வீரனாக மிளிர்வதுடன், இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணியில் இணைந்து தனது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆதங்கத்தை பூர்த்தி செய்யும் வகையில் பழைய மாணவர் சங்கத்தால் அதன் விளையாட்டுத் துறைக்கான உப தலைவர் டொக்டர் ரஜீவ் நிர்மலசிங்கம், செயலாளர் ஆர்.இவங்கோவன் உட்பட பழைய மாணவர்கள் பலர் கலந்து கொண்ட நிகழ்வில் இச் சாதனை வீரனுக்கு நினைவுச் சின்னமும் 1987 ஆம் ஆண்டு பழைய மாணவர்களால் கடினபந்து கிறிக்கட் துறைக்கான சகல விளையாட்டு உபகரணங்களும் அடங்கிய பொதி, சீருடை ,காலணி கொள்வனவு செய்வதற்கான பண வவுச்சர் என்பவற்றுடன் பழைய மாணவரான விநாயகமூர்த்தி ஜனகனால் ஒரு வருடத்திற்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :