அதிகார பரவலாக்கம் செய்ய தமிழர்களுக்கும், முஸ்லிங்களுக்கும் உப ஜனாதிபதி பதவி உருவாக்கப்பட வேண்டும் - ஹரீஸ்


நூருல் ஹுதா உமர்-

மு
ன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகர் தலைவருமான எம்.எச்.எம். அஸ்ரப் கடந்த காலங்களில் சிறுபான்மையினருக்கு நிரந்தர அதிகார பகிர்வாக சிறுபான்மையினருக்கான இரு உப ஜனாதிபதி பதவிகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற புதிய கோட்பாட்டை முன்வைத்தார்.

 இரு சமூகங்களினதும் சமத்துவம் உயர்ந்த நிலையில் வருகிற போது இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய இரு சமூகங்களினதும் தலைவர்கள் முன்வருவார்கள். புலம்பெயர்ந்து பல நாடுகளிலும் பல லட்சக்கணக்கான தமிழ் மக்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

 அவர்களின் ஒரு பிரதிநிதி இந்த நாட்டின் அரசியல் அதிகாரத்தில் உப ஜனாதிபதியாக இருக்கும் போது இந்த நாட்டை கட்டியெழுப்ப அவர்களின் பாரிய பங்களிப்பை பெற முடியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரிஸ் பாராளுமன்ற வரவு செலவு விவாதத்தில் உரையாற்றிய போது இன்று தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு பேசிய அவர், அதே போன்று இந்த நாட்டின் சிறுபான்மை இனமான முஸ்லிங்கள் மத்திய அரசில் உறுதியான அதிகாரத்தை பெறுகின்ற போது மத்திய கிழக்கு போன்ற இதர வெளிநாடுகளிலிருந்து இந்த நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப ஒத்துழைப்புக்களை பெற முடியும் என்ற தூரநோக்குடனையே தலைவர் அஸ்ரப் அரசியல் அதிகாரம் என்பது மாகாணங்களுக்கு மட்டுமே ஆனதாக இல்லாமல் மத்தியிலும் இவ்வாறான அரசியல் அதிகார பகிர்வு ஏற்படுகின்ற போது இந்த நாட்டை சிங்கள, தமிழ், முஸ்லிம், தலைவர்கள் எல்லோரும் சேர்ந்து எமது நாட்டை பொருளாதார ரீதியாக வலுப்படுத்த முடியும் என்று எண்ணினார். 

அதனூடாகத்தான் இந்த நாட்டின் பொருளாதாரம் வலுப்பெறும் எமது நாட்டின் வளமான இளைஞர்கள் வெளிநாட்டில் சென்று வேலை செய்யாமல் எமது நாட்டிலையிலையே கௌரவமாக வேலைசெய்ய முடியும் என்று நானும் நம்புகிறேன்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாகாணங்களுக்கு பல்கலைக்கழகங்களை அமைக்கும் அதிகாரத்தை வழங்கியுள்ளார்.

 இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளித்து போன்று மத்திய அரசாங்கத்திலும் சிறுபான்மை மக்கள் நிரந்தரமான அதிகாரத்தை வகிக்கும் வகையில் ஜனாதிபதி இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :