சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பான அவசர முறைப்பாடு, தொலைபேசி இலக்கங்கள் மக்கள் மயப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்.


நூருல் ஹுதா உமர்-

சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பான வன்முறைகள் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் முறையீடு செய்ய 24 மணி நேர அவசர தொலைபேசி இலக்கங்களான 1929 மற்றும் 1938 ஆகிய இலக்கங்கள் ஊடாக அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடுகளை செய்ய முடியும். 

இவ் அவசர தொலைபேசி இலக்கங்களை மக்கள் மயப்படுத்தும் நோக்குடன், அதன் முதற்கட்டமாக பொதுமக்கள் அதிகம் சேவை நாடி வரும் பிரதேச செயலகத்தின் உடைய சேவைப் பிரிவுகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து அவசர இலக்கமிடப்பட்ட விழிப்புணர்வு விளம்பர சுவரொட்டிகளை காட்சிப்படுத்தும் நிகழ்வு இறக்காமம் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி) தலைமையில் இறக்காமத்தில் இடம்பெற்றது.

அண்மைக் காலமாக சிறுவர் மற்றும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் பாரிய அவதனாம் எல்லா தரப்பினராலும் செலுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் சிறுவர் மற்றும் பெண் தொடர்பான துஷ்பிரயோகங்கள், வன்முறைகள் மற்றும் பாதுகாப்பற்ற நிலமைகள் அதிகம் பதிவாகி வருகின்றன.

 இந்நிலையில் அவர்களுடைய பாதுகாப்பு தொடர்பில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்நிகழ்வில் நிருவாக உத்தியோகத்தர் எம்.எம்.எம். தௌபீக், நிருவாக கிராம உத்தியோகத்தர் எச்.பி. இ. யசரட்ன பண்டார மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர்கள் உட்பட பிரதேச செயலக ஏனைய பிரிவு உத்தியோகத்தர்கள் கிளை தலைவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :