இரண்டாம் தேசிய மொழி (சிங்கள) தின தேசிய மட்ட போட்டிகளுக்கு கல்முனை மஹ்மூத் தேசிய கல்லூரி மாணவிகள் தெரிவு.எம்.ஏ.ஏ.அக்தார்-
ல்முனை வலய மட்ட இரண்டாம் தேசிய மொழி சிங்கள தின போட்டிகளில் பங்குபற்றிய கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவிகளில் இருந்து 14 பேர் கிழக்கு மாகாண மட்ட இரண்டாம் தேசிய மொழி சிங்கள தின போட்டிகளில் பங்கேற்ற நிகழ்வு மட்டக்களப்பு மஹஜன கல்லுரியில் இடம்பெற்றது.

இதில் நாட்டார் பாடல்கள், வாசிப்பு, பேச்சு ஆகிய போட்டி நிகழ்ச்சிகள்
கல்லூரி சார்பாக 11 மாணவிகள் பங்குபற்றினர். குறித்த நிகழ்ச்சிகளான: வாசிப்பு தரம் 7 பிரிவு சேர்ந்த ஜ.ஜ. சுமையா முதலாம் இடத்தினையும் தரம் 9 பிரிவை சேர்ந்த கே. ஆயிஷா ஹனின் இரண்டாம் இடத்தினையும் பெற்று தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளனர்.

பின்னர் கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியில் இடம்பெற்ற போட்டி நிகழ்ச்சியில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி சார்பாக மூன்று மாணவிகள் போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்றியிருந்தனர்.

இதில் மொழிப்பிரயோகம் கிரகித்தலும் நிகழ்ச்சியில் எம்.எ. ஆஷிமா செய்ராஹ் முதலாம் இடத்தினையும் ஆர். சைனப் சுஹா இரண்டாம் இடத்தினையும் பெற்று குறித்த நான்கு மாணவிகள் தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவாகி கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

கிழக்கு மாகாண மட்ட இரண்டாம் தேசிய மொழி (சிங்களம்) போட்டி நிகழ்ச்சிக்கு மாணவிகளை திறம்படவழிப்படுத்திய சிங்கள பாட இணைப்பாளர் ஏ.எம். நெளஷத், சிங்கள பாட ஆசிரியர்களான ஏ.எம்.எம். அனீஸ், எம்.ஜ.எப். பாத்திமா சபானா மற்றும் சாதனை படைத்த மாணவிகளுக்கும் பாடசாலை சமூகம் சார்பாக அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் நன்றிகளைத் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றார்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :