மாவடிப்பள்ளியை அண்டிய பிரதேசங்களிலும்,வயல் பிரதேசங்களிலும் மற்றும் சாய்ந்தமருது கரைவாகு ஆற்றுப் பிரதேசங்களிலும் பகலிலும் இரவிலும் முதலைகளின் தொல்லை அதிகரித்து வருவதால் பிரதேச மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாறை மாவட்டத்தின் வேறு பிரதேசங்களில் வாழ்ந்த முதலைகள் அண்மையில் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இப்பிரதேசங்களிலுள்ள ஆறுகளிலும் குளங்களிலும் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டுள்ளன.
பகல் வேளைகளில் ஆற்று ஓரங்களில் திரியும் முதலைகள் ஆடுகள் மற்றும் கோழிகளை பிடித்து உண்பதால் இவற்றை வளர்த்து அதன் மூலம் தமது ஜீவனுபாயத்தை கடத்தும் வறிய மக்கள் பலவிதமான பொருளாதார நஸ்டத்தினை அனுபவித்து வருகி்ன்றனர் .
தற்போது பெரும்போக வேளாணாமைச் செய்கை ஆரம்பித்துள்ள நிலையில் ஆற்று ஓரங்களிலுள்ள வயல்களில் இரவு வேளைகளில் வயல் நிலங்களிலுள்ள இளம் பயிர்களுக்கு பெரும் சேதத்தை உண்டுபண்ணுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment