கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்தியத்திலுள்ள ஆயுள்வேத வைத்தியசாலை வளாகங்களில் மரம் நடும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த திட்டத்தின் கீழ் சம்மாந்துறை மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலை வளாகத்தில் மரம் நடும் நிகழ்வு பிராந்திய ஆயுள்வேத பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஏ.நபீல் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் பிரதம அதிதியாகவும், பிரதிப் பணிப்பாளர் டொக்டர் எம்.பீ.அப்துல் வாஜித் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் றிஸ்கா உள்ளிட்ட வைத்தியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
மா, பலா, தோடை உட்பட மூலிகை மரங்களும் வைத்தியசாலை வளாகத்தில் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment