சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலயத்தின் முப்பெரு விழா கல்லூரி முதல்வர் அஷ்ஷேஹ் எம்.ஐ.எம். கலீல் நழீமி தலைமையில் பாடசாலை வெளியக அரங்கத்தில் நேற்று திங்கட்கிழமை (16) காலை நடைபெற்றது.
சம்மாந்தறை வலயக்கல்விப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம். செய்யட் உமர் மௌலானா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப்பணிப்பாளர்களான பி.எம்.வை. அறபாத் முகைடீன், திருமதி. என். மகேந்திரகுமார், ஏ.எல். அப்துல் மஜீட், உதவிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ. நசீர், பி. பரமதயாளன், எச். நைறோஸ்கான், எம்.ரி. முகம்மட் ஜனூபர் ஆகியோரும் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஐ.எம். முஷர்ரப், பாடசாலையின் பி.எஸ்.ஐ. இணைப்பாளர் ஏ. அகமட் லெப்பை, ஆசிரிய ஆலோசகர் இஸட். எம். றிஸ்வி மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது இப்பாடசாலை சம்மாந்துறை வலையத்தில் முன்மாதிரியான முதன்மைப்பாடசாலைகளுள் ஒன்றாக திகழ்வதற்கு காத்திரமான பங்களிப்புச் செய்து அதில் வெற்றிகண்ட கல்லூரி அதிபர் அஷ்ஷேஹ் எம்.ஐ.எம். கலீல் அவர்களை கௌரவிக்கும் வகையில் ஆசிரியர்கள் சார்பாக நிகழ்வின் பிரதம அதிதியான வலயக்கல்விப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம். செய்யட் உமர் மௌலானா அவர்களினால் மலர்மாலை அணிவித்து நினைவுச்சின்னம் மற்றும் நினைவுப் பரிசு என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அத்தோடு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அர்பனிப்புடன் சேவையாற்றுகின்ற இப்பாடசாலையின் ஆசிரியர்களுக்கு இதன்போது நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்படனர்.
மேலும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – 2022 (2023) இல் தோற்றி வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த 20 மாணவர்களையும் பாராட்டி பதக்கங்கள் அணிவித்து நினைவுச்சின்னங்கள் வழங்கிவைக்கப்பட்டன. அத்தோடு அம்மாணவர்களுக்கு கட்பித்த ஆசிரியர்களின் தன்னலமற்ற சேவையினைப் பாராட்டி நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பாடசாலையின் வரலாற்றை மனக் கண் முன் கொண்டுவரும் வகையில் அமைந்த வில்லுப்பாட்டு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment