கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் சர்வதேச ஆசிரியர் தின விசேட நிகழ்வு : பிரதம அதிதியாக ஹரீஸ் எம்.பி !!


நூருல் ஹுதா உமர்-

ல்முனை கல்வி வலய கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் சர்வதேச ஆசிரியர் தின விசேட நிகழ்வுகள் கல்லூரி முதல்வர் ஏ.பி. பாத்திமா நஸ்மியா சனூஸ் தலைமையில் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு வாழ்த்துரை நிகழ்த்தியதுடன், பாடசாலையின் எதிர்கால மேம்பாடு, மாணவர்களின் கல்வி உயர்வுக்கான வேலைத்திட்டம், வசதிகுறைந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில் பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் ஆசிரியர்களின் கல்வி பங்களிப்பில் ஏற்படுத்தவேண்டிய மாற்றங்கள், ஆசிரியப்பணியின் கௌரவங்கள் தொடர்பிலும் விசேட உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.எஸ். நஜீம் கௌரவ அதிதியாக கலந்து கொண்டதுடன் கல்முனை கோட்டக்கல்வி அதிகாரி யு.எல். றியால் விசேட அதிதியாக கலந்து கொண்டார். மேலும் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக அதிகாரிகள், பாடசாலை பழைய மாணவிகள் சங்க பொருளாளர் உட்பட நிர்வாகிகள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் உட்பட உறுப்பினர்கள், பிரதி அதிபர், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

முழுமையாக ஆசிரியர்களின் கலை நிகழ்வுகளுடன் நடைபெற்ற இவ்வாசிரியர் தின விழாவில் ஆசிரியர்களின் சேவையை பாராட்டி நினைவுசின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :