அம்பாறை மாவட்ட வயல் பிரதேசங்களில் மதுப்பிரியர்கள் கைவரிசைஅஸ்ஹர் இப்றாஹிம்-
ண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த மதுப்பிரியர்கள் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மதுப்பாவனை அதிகரித்துள்ளது.

நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை விவசாய விஸ்தரிப்பு பகுதிக்குட்பட்ட வயல் பிரதேசங்களில் மாலை வேளையானதும் மதுப்பிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வண்ணம் உள்ளது.

சாராய போத்தல்கள் மற்றும் பியர் டின்களுடன் பரிமாறும் இவர்கள் மது அருந்திய பின்னர் வெற்று போத்தல்களையும் , பியர் டின்களையும் வாய்க்கால்களிலும் ஆறுகளிலும் வீசி விட்டு செல்கின்றனர்.

இவ்வாறான சூழலுக்கு அச்சுறுத்தலாக அமையும் இந்த செயற்பாட்டினால் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் , ஆற்றில் மீன்பிடிக்கும் மீனவர்கள் மற்றும் நீர் வாழ் உயிரினங்கள் என்பன பாதிப்பிற்குள்ளாவதோடு விவசாய நடவடிக்கைகளை தொடர்வதற்கும் அச்சப்படுகின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்துமாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :