எச்என்பி(HNB) ஏற்பாட்டில் 25 கர்ப்பிணி தாய்மார்களுக்கு உலருணவுப் பொதிகள்!



வி.ரி. சகாதேவராஜா-
ற்றன் நாசனல் வங்கியின்(HNB) சமூக மேம்பாட்டு செயற்திட்டத்தின் கீழ் காரைதீவு பிரதேசத்தில் 25 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

காரைதீவு ஹற்றன் நாஷனல் வங்கியின் முகாமையாளர் கே.ஜெயபாலன் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாக வங்கியின் பிராந்திய முகாமையார் என் .கேதீஸ்வரன் கலந்து சிறப்பித்தார்.

காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்ஸிமா பஷீர் கௌரவ அதிதியாகவும், வங்கியின் பிராந்திய கடன் பிரிவுத் தலைவர் எஸ்.சத்தியசீலன், பிராந்திய கடன் அறவீட்டுப்பிரிவுத் தலைவர் ஏ.எல்.சிறாஜ் அகமட் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

கர்ப்பிணி தாய்மார்களுக்கு மூன்று மாதங்களுக்கு தேவையான மாதாந்த உலர் உணவுப்பொதிகள் சுகாதார வைத்திய அதிகாரி ஊடாக தாய்மாரின் ஆரோக்கியத்துக்காக வழங்கப்பட்டது .

சமகால பொருளாதார நெருக்கடியில் இருந்து கர்ப்பிணி தாய்மாரை மீட்டு உடல் நலத்தின் மேம்பாட்டை உறுதிப்படுத்தும் முகமாக இத்திட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டது.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :