கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை நிர்ப்பீடன முன்னாய்வு மீளாய்வுக் கூட்டம்நூருல் ஹுதா உமர்-
ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸ் அவர்களின் வழிகாட்டலுக்கும் ஆலோசனைக்கும் அமைவாக கல்முனை பிராந்திய தொற்றுநோய் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஏ.சீ.எம் பஸால் அவர்களினால் நிர்ப்பீடனம் தொடர்பான முன்னாய்வு மீளாய்வு கூட்டம் இன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

குறித்த மீளாய்வில் கல்முனை சுகாதார பிராந்தியத்திற்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரிகளும் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்களும் மேற்பார்வை பொது சுகாதார மாதுக்களும் பொது சுகாதார தாதிய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டதுடன் சுகாதார வைத்திய அதிகாரிகள் நிர்ப்பீடனம் தொடர்பில் தத்தமது பிரதேச முன்னேற்ற அறிக்கைகளை முன்வைத்து விளக்கக்காட்சி தொகுப்புரைகளையும் வழங்கினர்.

இந்நிகழ்வின் போது தொற்று நோய்களை திறம்பட எதிர்த்துப்போராடவும் குழந்தைகள் மற்றும் தாய்மாரின் நிர்ப்பீடன சக்தியை அதிகரிப்பதற்குமான ஆலோசனையிலும் பங்குபற்றுனர்கள் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வின் போது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களுக்கான மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் முதற்கட்டமாக 05 மடிக்கணினிகள் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.பீ.ஏ.வாஜித் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :