சம்மாந்துறை (ATI) பணிப்பாளரின் ஆலோசனையில் பேருந்து தரிப்பிடம் புணர் நிர்மானம்!சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்-
ம்மாந்துறை உயர் தொழில்நுட்பவியல் கல்விநிறுவனத்தின் (ATI) பணிப்பாளர் எஸ்.எல். முஸ்தபா அவர்களின் ஆலோசனையின் கீழ் நஜா பவுண்டேசன் அமைப்பின் நிதிப்பங்களிப்புடன் முதலாம் வருட உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா பகுதிநேர மாணவர்களின் ஒத்துழைப்புடன் சம்மாந்துறை உயர் தொழில் நுட்பவியல் கல்விநிறுவனத்தின்முன்பாக பிரதான பாதையில்அமைந்துள்ள பேருந்து தரிப்பிட புணர் நிர்மானத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று முன்தினம் (18) இடம் பெற்றது.

இன் நிகழ்வில் சம்மாந்துறை உயர் தொழி நுட்பவியல் பணிப்பாளர் எஸ்.எல் கல்விநி றுவனத்தின்முஸ்தபா, நஜா பவுண்டேசன் அமைப்பின் தலைவர் எஸ்.எம் நபீல்,சம்மாந்துறை உயர் தொழில்நுட்பவியல் கல்விநிறுவனத்தின்ஆங்கிலகற்கை துறை பொறுப்பாளர் எம்.பி நெளசாட்,கணக்கியல் துறை பொறுப்பாளர் பெரோஸ்,

அதிபர்கள் ,நஜா பவுண்டேசன் அமைப்பின் உயர் பீட உறுப்பினர்கள்,கல்விசாரா ஊழியர்கள்மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

முதலாம் வருட உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா மாணவர்களின் பாடத்திட்டத்தில் உள்ள சமூக பொறுப்புணர்வுகுறித்த குழுசெயற்திட்டத்திற்கு ஏற்ப இவ் வேலைதிட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :