நிலைபேறான வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் அகம் மனிதாபிமான வளநிலையம் (AHRC) ஊடாக விவசாய உபகரணங்கள் கிண்ணியாவில் வழங்கி வைக்கப்பட்டது.


ஹஸ்பர்-
குறித்த பொருட்களானது இன்று (08) கிண்ணியா பிரதேச சபை வளாகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. மக்கள் பங்கேற்பு ஜனநாயக ரீதியான திட்டத்தின் ஒரு பகுதியாக கலந்துரையாடல் ஒன்றும் இடம் பெற்று வருகின்றது குறித்த கலந்துரையாடலானது சிவில் சமூக அமைப்புக்கள்,உள்ளூர் ஊடகவியலாளர்கள்,உள்ளூராட்சிமன்றங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய வகையில் இடம் பெற்று வரும் 45 நாட்களுக்கு ஒரு முறை இடம் பெறும் கலந்துரையாடலின் பின் மக்களின் தேவைகள் முன்னுரிமை அடிப்படையின் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்காக இக் குறித்த விவசாய உபகரணங்கள் வழங்கப்படாடன. தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலமையில் இருந்து இத் திட்டம் ஊடாக முன்னேற இவ் உபகரணங்கள் பெரும் உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாய உபகரணங்களான நீர்ப் பம்பி,நீர் குழாய் என சுமார் தலை 50 ஆயிரம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் இரு குடும்பங்களுக்கு தங்களது விவசாய தோட்டச் செய்கையை மேம்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்டன.
 
இதில் அகம் மனிதாபிமான வள நிலைய பிரதி இணைப்பாளர் அ.மதன், கிண்ணியா பிரதேச சபை உள்ளூராட்சி உதவியாளர் இ.கலைமதி,சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெ.நஜாத், அகம் மனிதாபிமான வள நிலைய திட்ட ஆலோசகரும் வளவாளருமான என்.மிதுனாளன்,அகம் மனிதாபிமான வள நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் என்.மிரேகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :