இந்நிகழ்வில் சாய்ந்தமருது - மாளிகைக்காடு உலமா சபை தலைவர் அஷ்செய்க் ஏ.எல்.எம். சலீம் (சர்க்கி) அவர்கள் ரமழான் சிந்தனையை வழங்கினார்.
நிகழ்வில் முன்னாள் உயர் நீதி மன்ற நீதிபதி ஏ.எல்.எம்.மைமூனா அவர்களும் அரசியல் பிரமுகர்களான முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், கல்முனையின் முன்னாள் முதல்வர் சிறாஸ் மீராசாகிப், முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் உள்ளிட்டவர்களுடன் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்மா பெரிய பள்ளிவாசலின் தலைவர், பொறியலாளர் சாகீர், சகாதேவராஜா மற்றும் சகறூன் உள்ளிட்ட கல்வியாளர்களும் பாடசாலைகளின் அதிபர்கள் முன்னாள் அதிபர்கள் பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள் நண்பர்கள் பாடசாலையின் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இங்கு பாடசாலையில் கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்த அதிபர் இழுபறி தொடர்பான விளக்கங்களை அதிபர் திருமதி றிப்கா அன்சார் அவர்கள் விரிவாக விளக்கியமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment