எரிவாயு சிலிண்டர் விலைகள் குறைவு-பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்பாறுக் ஷிஹான்-
ரிவாயு சிலிண்டர் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன்படி மாவட்டந்தோறும் விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் மாவட்டத்தில் என்ன விலை உள்ளது என்பதைப் பார்க்க விலைப்பட்டியலைப் பார்வையிடுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுவதுடன் குறித்த நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மேலதிகமாக பணத்தினை கொடுக்க வேண்டாம் என நுகர்வோர் அதிகார சபை கேட்டுள்ளது.

இதன் படி லிட்ரோ சமையல் எரிவாயு புதிய விலை கடந்த செவ்வாய்க்கிழமை (04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்த நிலையில் புதிய விலைகள் பின்வருமாறு அறிவித்துள்ளது.

12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1005 ரூபாவால் குறைப்பு (புதிய விலை 3738 ரூபா)
05 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 402 ரூபாவால் குறைப்பு (புதிய விலை 1502 ரூபா)
2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 183 ரூபாவால் குறைப்பு (புதிய விலை 700 ரூபா) ஆகும்.

அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை பின்வருமாறு

12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை-4050 /-
05 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை -1690/-
2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை -852/-

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் விலைச்சூத்திரத்திற்கு ஏற்ப இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளதாக அதன் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதே வேளை மற்றுமொரு நிறுவனமான லாஃப்ஸ் தனது எரிவாயு விலை குறைப்பினை அறிவித்துள்ளது.

இதன்படி லாஃப்ஸ் கேஸ் தனது உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை கடந்த செவ்வாய்க்கிழமை (4) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதுடன் அதன்படி 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ எடையுள்ள லாஃப்ஸ் வீட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் ஏப்ரல் புதன்கிழமை 5ஆம் திகதி முதல் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.5280 ல் இருந்து ரூ.3990 ஆகவும் எரிவாயு விலையை ரூ.1290 ஆகவும் குறைத்துள்ளது. 5 கிலோ எரிவாயு சிலிண்டர் ரூ.2112 ல் இருந்து ரூ.1596 க்கு ரூ.516 குறைக்கப்பட்டு வாடிக்கையாளருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
சந்தை எரிவாயு விலை மற்றும் ரூபாயின் ஸ்திரத்தன்மையைக் கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச விலைச் சலுகைகளை வழங்க தமது நிறுவனம் எதிர்பார்த்துள்ளதாகவும் மாவட்டங்களுக்கு ஏற்ப விலை மாற்றங்கள் பற்றிய கூடுதல் விவரங்களை அறிய லாஃப்ஸ் எரிவாயு வாடிக்கையாளர் சேவை எண் 1345 ஐ அழைத்து பொதுமக்கள் தெளிவினை பெற முடியும் என குறிப்பிட்டுள்ளது.

மேலும் கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை, சாய்ந்தமருது, காரைதீவு ,பாண்டிருப்பு, பெரியநீலாவணை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று,உள்ளிட்ட பகுதிகளில் விநியோகிக்கப்படுகின்ற எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை நுகர்வோர் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரிகளின் மேற்பார்வையில் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :