சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட அஹதிய்யா பாடசாலை அபிவிருத்தி குழுவின் நிர்வாகத் தெரிவும், கலந்துரையாடலும் !நூருல் ஹுதா உமர்-
சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட அஹதிய்யா பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்ட அஹதிய்யா பாடசாலை அபிவிருத்தி குழுவின் நிர்வாகத் தெரிவும், கலந்துரையாடலும், இப்தார் நிகழ்வும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம். பர்ஹானின் ஒருங்கிணைப்பில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் தலைமையில் சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அஹதிய்யா பாடசாலை அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது. இதில் ஆலோசகர்களாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக், சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரி என்.எம்.ஏ.மலிக், சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் தலைவர் ஏ. ஹிபதுல் கரீம், சாய்ந்தமருது- மாளிகைக்காடு உலமா சபை தலைவர் எம்.எம்.சலீம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

அஹதிய்யா பாடசாலை அபிவிருத்தி குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஐ.எம். தௌபீக் அவர்களும், பிரதித்தலைவராக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் பொறியியலாளர் ஏ.எம்.ஏ.சஜா, செயலாளராக கலாச்சார உத்தியோகத்தர் மௌலவி ஏ.எம்.தௌபீக் (நளீமி), உதவிச் செயலாளராக ஆசிரியர் ஏ.ஆர்.எம்.நளீம், பொருளாளராக பொறியலாளர் எம்.சீ.கே.கமால் நிசாத், கணக்காய்வாளர்களாக பிரதேச செயலக நிதி உதவியாளர் ஏ.சீ.முஹம்மட், சுங்கத் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் ஏ.ஜலீல் மற்றும் ஊடக ஒருங்கிணைப்பாளராக பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சீ.எம்.பழீல் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

பாடத்திட்ட மீள் ஒருங்கிணைப்பு குழுவாக சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரி என்.எம்.ஏ.மலிக், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் பொறியியலாளர் ஏ.எம்.ஏ.சஜா, இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.ஆர்.எம்.அன்சார், ஆசிரியர், ஏ.எம்.அன்சார், ஓய்வுபெற்ற அதிபர் ஏ.எல்.ஏ.நாபித் ஆகியோரும் நிதி திரட்டல் குழுவாக பொறியலாளர் எம்.சீ.கே.கமால் நிசாத், சுங்கத்திணைக்கள பிரதிப்பணிப்பாளர் ஏ.ஜலீல், பொறியலாளர் எம்.ஐ.எம்.றியாஸ், பிரதேச செயலக நிதி உதவியாளர் ஏ.சீ.முஹம்மட், தொழிலதிபர்களான இஸட்.எம்.அமீன், எம்.ஜிப்ரி ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

மேலும் உறுப்பினர்களாக சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா, சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய அதிபர் எம்.சீ.என்.றிப்கா, பிரதியதிபர் எப்.நாதீரா, ஆசிரியர் ஏ.ஆர்.ஏ.அஷ்ரப் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டு நிகழ்வின் இறுதியில் இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :