கிழக்கு முன்பள்ளிச் சிறார்களுக்கு ஆங்கில மொழியைக் விருத்தியுடன் பயன்படுத்தும் விசேட வேலைத்திட்டம்நூருள் ஹுதா உமர்-
கார்கில்ஸ் நிறுவனத்தின் இலங்கையிலுள்ள முன்பள்ளிச் சிறார்களுக்கு ஆங்கில மொழியைக் விருத்தியுடன் பயன்படுத்தும் விசேட வேலைத்திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வி கற்பிக்கும் நிகழ்ச்சி அண்மையில் திருகோணமலை முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கார்கில்ஸ் நிறுவன உத்தியோகத்தர்களால் பாலர் ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக, நாட்டின் ஏனைய மாகாணங்களிலும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், ஆளுநரின் தலையீட்டின் பேரில், கிழக்கு மாகாணத்திலும் இத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு கார்கில்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது.

எதிர்வரும் காலங்களில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை மையப்படுத்தி இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த நிகழ்வில் மாகாண முன்பள்ளி பணியகத்தின் தலைவர் பிராவோ ஹேண்டி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :