சாய்ந்தமருது அல் - ஹிலாலில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வுஎம்.எஸ்.எம்.ஸாகிர்-
சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்தார் நிகழ்வு (16) ஞாயிற்றுக்கிழமை மாலை பாடசாலையில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் யூ.எல். நஸார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், மாளிகைக்காடு அந்-நூர் ஜும்ஆ பள்ளிவாசல் பேஷ் இமாம் ஏ.எம்.எம். மின்ஹாஜ் (உஸ்மானி) ரமழான் சிந்தனை வழங்கினார்.

பாடசாலையின் அதிபர் யூ.எல். நஸார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அதிதிகளாக,
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர். றமீஸ் அபூபக்கர், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சஹ்துன் நஜீம் உட்பட பிரதிக் கல்விப் பணிப்பாளர், உதவிக் கல்விப் பணிப்பாளர், கணக்காளர் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.எம்.றிபாஸ்,
கல்முனை கல்வி மாவட்ட மாவட்ட பொறியியலாளர் ஏ.எம்.சாஹிர்,
சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜும்மா பெரிய பள்ளிவாசல் பொறுப்பாளர் சபையின் செயலாளர் ஐ.எல்.எம். மன்சூர், சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் அஷ்ஷெய்க். எம்.எம்.எம்.சலீம் (ஷர்க்கி),
சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தக சங்கத் தலைவர்எம்.எஸ்.எம்.முபாறக்,
சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன்,
சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் என்.எம்.ஏ.மலீக், ஓய்வுநிலை மேலதிக வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தார்,
மாளிகைக்காடு அந்-நூர் ஜும்ஆ பள்ளிவாசல் பேஷ் இமாம் ஏ. எம். எம். மின்ஹாஜ் (உஸ்மானி), பொதுச் சேவை ஆணைக்குழு முன்னாள் உறுப்பினரும், சாய்ந்தமருது முன்னாள் பிரதச செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம், தென்கிழக்குப் பல்கலைக்கழக பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர், பேராசிரியர் ஜௌபர், சட்டத்தரணி ரஸ்ஸாக்,
CMT கெம்பஸ் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஏ.எம்.ஜெமீல்,
றியோ மார்க்கட்டிங் நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் என்.எம்.றிஸ்மிர், சொப்டா நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி பொறியியலாளர் நஸீர்.
சாய்ந்தமருது, மாளிகைக்காடு பாடசாலை அதிபர்கள்,
வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர் எம். ஐ. எம். றியாஸ், வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளர் எம்.எம்.எம்.முனாஸ், திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச். அல் - ஜவாஹிர், உட்பட கல்விமான்கள், புத்திஜீவிகள், பாடசாலை நலன்விரும்பிகள், அதிபர் சங்க பிரதிநிதிகள், அல்-ஹிலால் வித்தியாலய பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள்,
பாடசாலை முகாமைத்துவ குழு உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள்,
பழைய மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :