சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயகொடி கல்முனைக்கு விஜயம்.



நூருல் ஹுதா உமர்-
ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அழைப்புக்கு அமைவாக சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி செவ்வாய்க்கிழமை11 கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

கடந்த 2023.04.03 ஆம் திகதி சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆயுர்வேத உற்பத்திகளை நவீனமயப்படுத்தல் மற்றும் பாரிய ஆயுர்வேத மூலிகை தோட்டத்தை (herbal Gardening) அமைத்தல் போசனை செயற்றிட்டங்களை விரிவுபடுத்துதல் அரசாங்க தனியார் பங்களிப்புடன் உற்பத்திகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக குறித்த செயற்றிட்டங்களையும் பிரேரணைகளையும் நேரடியாக பார்வையிடுவதற்காகவும் ஏனைய பிரதேசங்களிலும் இவ்வாறான செயற்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்காகவும் இராஜாங்க அமைச்சர் தலைமையிலான குழுவினர் பணிமனைக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக்கலந்துரையாடலில் பணிமனை சார்பில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்களுடன் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.சீ.எம் மாஹிர் கல்முனை பிராந்திய ஆயுர்வேத பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.ஏ. நபீல், டாக்டர் டீ.ஆர்.எஸ்.டீ.எஸ். ரஜாப், பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எஸ்.எம். பௌசாத், கல்முனை ஆயுர்வேத மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எம். இஸ்ஹாக் உள்ளிட்டபிரிவுத் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :