கஞ்சிகுடிச்சாற்றில் நிலக்கடலை செய்கைக்காக 28பேருக்கு 13லட்ச ரூபா கடனுதவி!



வி.ரி.சகாதேவராஜா-
கஞ்சிகுடியாறு கிராமிய பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துமுகமாக
நிலக்கடலை செய்கைக்காக 28பேருக்கு தலா 45ஆயிரம் ரூபாய் வீதம் 13லட்ச ரூபாய் கடனாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரனின் வேண்டுகோளுக்கமைவாக கனடிய நாட்டில் உள்ள சர்வதேச ஐக்கிய மகளிர் அமைப்பின் நிதி உதவியின் கீழ் Langa Vision Action Foundation அமைப்பினரால் கஞ்சிகுடியாறு கிராமிய பெண்கள் நலன்புரி அங்கத்துவர்கள் 28 பேருக்கு இவ் உதவி வழங்கப்பட்டது. இதில் மொத்தமாக 1,260,000/= வழங்கப்பட்டது.


இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் கந்தவனம் சதிசேகரன் பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் கே.பரமானந்தம் மற்றும் கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் ஏ.கந்தசாமி மற்றும் Langa Vision Action Foundation முகாமையாளர் எஸ்.யுவன் மற்றும் அதன் இணைப்பாளர் மற்றும் கஞ்சிகுடியாறு கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , பயனாளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :