ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் 106 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டி (17) இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தலைமையில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் 2006 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளின் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்ற அணிகள் மோதிக் கொண்டன.
இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 2006 அணியினர் 10 ஓவர்கள் முடிவில் 07 விக்கட்டுக்களை இழந்து 108 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 2017 அணியினர் 09 ஓவர்கள் முடிவில் 05 விக்கட்டுக்களை இழந்து 112 ஓட்டங்களைப் பெற்று கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர்.
இறுதிப் போட்டியில் ஆட்டநாயகனாக 2017 அணி வீரர் இன்ஷாப் தெரிவு செய்யப்பட்டதுடன், தொடர் ஆட்டநாயகனாக 2017 அணி வீரர் நிஷாத், சிறந்த களத்தடுப்பு 2004 அணி வீரர் ஜலால்தீன், சிறந்த பந்து வீச்சு 2017 அணி வீரர் ஆஷிக், சிறந்த துடுப்பாட்ட வீரர் 1998 அணி வீரர் முஹம்மது அலி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
அத்துடன், சுற்றுத் தொடரின் நன்னடத்தை அணியாக 2001 அணியும், சாதனைகள் பல நிகழ்த்திய அணியாக 1998 அணியினரும் தெரிவு செய்யப்பட்டு நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், அதிதிகளாக பாடசாலையின் ஓய்வுபெற்ற முன்னாள் அதிபர்களான ஏ.எம்.ஏ.காதர், எம்.சி.எச்.முஹம்மட், ஐ.எல்.மஹ்றூப், எம்.எல்.ஏ.ஜுனைத் மற்றும் இச்சுற்றுத் தொடரை வெற்றிகரமாக நடத்தி முடிக்க முழு அணுசரனை வழங்கிய ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவ அதிதிகளும் கலந்து கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.
சுற்றுத் தொடர் அனைத்தையும் சிறப்பாக நடாத்தி முடிக்க ஒத்துழைப்புகளை வழங்கிய நடுவர்கள், அணிகளின் வீரர்கள், பார்வையாளர்கள், அனைத்து வழிகளிலும் ஒத்துழைப்புக்களை வழங்கியவர்கள் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கு பழைய மாணவர் சங்க விளையாட்டுக்குழுவினர் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment