தலை குனிந்து கற்றால் தலை நிமிர்ந்து வாழலாம்! பாராட்டு விழாவில் கல்விப்பணிப்பாளர் உமர் மௌலானா!


காரைதீவு சகா-
லை குனிந்து கற்றால் நாம் தலைநிமிர்ந்து வாழலாம். இதனை மாணவர்கள் மனதில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு சொறிக்கல்முனை ஹொலிகுறோஸ் மகா வித்தியாலய சாதனையாளர் பாராட்டு விழாவில் உரையாற்றிய சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் டாக்டர் செய்யட் உமர் மௌலானா தெரிவித்தார்.

இவ் விழா அதிபர் அருட்சகோதரி எம் சிறியபுஷ்பம் தலைமையில் நேற்றுமுன்தினம் சிறப்பாக இடம் பெற்றது.

கௌரவ அதிதிகளாக அருட்தந்தை ஜெயகாந்தன் அடிகளார், நாவிதன்வெளி கோட்டக் கல்வி பணிப்பாளர் பி. பரமதயாளன் , உதவிக் கல்விப் பணிப்பாளர் வீ.ரி.சகாதேவராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

அங்கு சம்மாந்துறை வலயத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடிய 175 புள்ளிகளைப் பெற்று வலயத்திலே முதல்நிலை சாதனை படைத்த மாணவன் சுதாகரன் சிரோன் வெற்றிக் கிண்ணம் வழங்கி பாராட்டப்பட்டார். அதேவேளை கற்பித்த ஆசிரியர் எஸ்.லோகேஸ்வரனுக்கு பாடசாலைச் சமுகம் ஆளுயர மாலைகள் சூட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்தது.

அங்கு பணிப்பாளர் உமர் மௌலானா மேலும் உரையாற்றுகையில்.. இந்தப்பாடசாலையில் ஒழுக்கம் பிரதானமாக ஓம்பப்படுகின்றது என்று நண்பர் சகா சொன்னார். உண்மைதான் அதன் காரணமாகவே வலையத்தில் 175 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்ற மாணவன் ஷெரோன் இந்த பாடசாலையில் இருக்கின்றார். ஏலவே 2020 ஆம் ஆண்டில் இதே பாடசாலையைச் சேர்ந்த ஷான் ஜொகிர்தன் 191 புள்ளிகளைப் பெற்று சாதனை நிலைநாட்டியதாக அதிபர் அருட்சகோதரி ஆ. சிறியபுஷ்பம் தெரிவித்தார்.
இவருக்கு கற்பித்த ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். குறிப்பாக தரம் 5 இல் கற்பித்த யோகேஸ்வரன் ஆசிரியர் ஒரு தியாகி எனலாம். மாணவர்களை வீட்டுக்கு அழைத்து 5 சதம் வாங்காமல் அவர்களை படிப்பித்திருக்கிறார். இவை எல்லாம் ஏனைய ஆசிரியர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றது.
நாலடியாரில் " கல்வி கரையிலே கற்போர் நாள் சில" என்று குறிப்பிடப்படுகிறது. எனவே இருக்கின்ற காலத்திலேயே நாங்கள் படிக்க வேண்டும் .நாங்கள் எல்லாம் அன்று பாயிலே குப்புறப் படுத்து படித்தோம். ஆனால் இன்று பல வசதிகள் இருக்கின்றன. இங்கு பல வசதியீனங்களுக்கு மத்தியிலே இவ்வாறான சாதனையை நிலைநாட்டப்பட்டிருப்பது அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் தொடக்கம் பெற்றோர் வரைக்கும் பாராட்டப்பட வேண்டியவர்கள். சித்தி பெற்ற அனைத்து மாணவர்களையும் வாழ்த்துகின்றேன்.

இச்சாதனை பாடசாலை வரலாற்றில் இரண்டாவது மைல் கல்லாகும். 2020 ஆம் ஆண்டில் இதே பாடசாலையைச் சேர்ந்த ஷான் ஜொகிர்தன் 191 புள்ளிகளைப் பெற்று சாதனை நிலைநாட்டப்பட்டிருக்கிறது.

அதேவேளை இப்பாடசாலையில் இருந்து எஸ்.ஆன் சுஹல்யா 160 புள்ளிகளையும், எஸ்.ஏஞ்சலிஸ்ரன்157 புள்ளிகளையும், சி. ஜெரொமி சாறுக்கா 144 புள்ளிகளையும், ஏ. மிதுர்சிக்கா 144 புள்ளிகளையும் பெற்று சாதனை படைத்ததோடு பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களும் 70 புள்ளிக்கு மேல் பெற்று 100 வீதம் சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :