கிழக்கு மாகாணத்தில் 2023 ஆம் ஆண்டிற்கான பாடசாலை மாணவர்களின் பாடநூல் மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் திருகோணமலை ஸ்ரீ மதுமி அம்பாள் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாடசாலை மாணவர்கள் இந்நிகழ்வில் வைத்து பாடசாலை பாடப்புத்தகங்களையும் சீருடைகளையும் பெற்றுக்கொண்டனர். இங்கு கருத்து தெரிவித்த ஆளுநர், கல்வியின் முக்கிய நோக்கம் தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டும் அல்ல. கல்வியின் மூலம் சிறந்த குணங்களைக் கொண்ட கனமான மனிதனை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் அத்தகைய குழந்தைகளை மதிப்பிடுவதற்கான உத்தியை வகுக்குமாறு மாகாண அதிகாரிகளுக்கு ஆளுநர் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டப்லியு. ஜி.திஸாநாயக்க, மாகாணக் கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் பி.ரவி, பாடசாலை அதிபர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment