"சமூக நல்லிணக்கத்திற்காய் ஒன்றினையும் இளைஞர்கள்" எனும் தலைப்பில் பல்கலைக்கழக விஜயம்



ஐ.எல்.எம் நாஸிம்-
GCERF HELVETAS நிதியுதவியுடன் GAFSO நிறுவனத்தின் அமுல்படுத்தலில் செயற்படுத்தப்படும் HOPE OF YOUTH வேலைத்திட்டத்தின் கீழ் பல்கலைக்கழக விஜயம் நேற்று முன்தினம் (04) மேற்கொள்ளப்பட்டது.

கப்சோ நிறுவனத்தின் திட்டப்பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சுமார் எட்டு பிரதேச செயலகங்களில் இருந்தும் நான்கு மதங்களை சேர்ந்த இளைஞர் யுவதிகள் " இளைஞர்களின் நம்பிக்கை "பங்கேற்பாளர்கள் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிலையத்தில் ஒருநாள் களவிஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.

அம்பாறை மாவட்ட இளைஞர்களை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அன்பாக வரவேற்றதுடன் ஒன்றாக கலந்து சமூக நல்லிணக்கம் , வன்முறை தீவிரவாதம் தவிர்த்தல் சார் நோக்கில் கலந்துரையாடினர்.

நிகழ்வில் பல்கலைக்கழக வாழ்வியல், வன்முறை தவிர்த்தல் பற்றிய விளக்கங்களும் கல்வி அதனுடைய சிறப்பம்சங்களும் இடம்பெற்றதுடன் திறன் விருத்தி சார் உளவியல் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் இளைஞர்களின் கலை சார் நிகழ்சிகள் அரங்கேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அதிதிகளாக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி. பாரதி , அம்கோர் நிறுவன பணிப்பாளர்
ராஜன் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :