வாழைச்சேனை அந் - நஹ்ஜதுல் இஸ்லாமியா அரபுக் கல்லூரியின் 1 ஆவது இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (19) ஓட்டமாவடி அமீர் அலி பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
அரபுக் கல்லூரியுடன் பழைய மாணவர் அமைப்பினர் இணைந்து நடாத்திய இவ் விளையாட்டுப் போட்டி பழைய மாணவர் அமைப்பின் தலைவரும் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் ஆசிரியருமான ஏ.எம்.இஸ்ஸத் அஹமத் நஹ்ஜி தலைமையில் இடம்பெற்றது.
இதில், பைதுல் ஹிக்மா (பச்சை நிறம்), பைதுர் ரஹ்மா (நீல நிறம்), பைதுந் நிஃமா (சிவப்பு நிறம்) ஆகிய மூன்று இலங்கள் போட்டியில் பங்குபற்றின.
இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளரும் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளருமான வீ.ரீ. அஜ்மீர் கலந்து கொண்டதுடன், ஏனைய அதிதிகளாக பாடசாலைகள், அரபுக் கல்லூரிகளின் அதிபர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதில், பைதுல் ஹிக்மா இல்லம் முதலிடம் பெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
0 comments :
Post a Comment