இலங்கை பாதுகாப்பு அமைச்சானது முப்படைகள் மற்றும் பொலிஸாரின் துனையுடன் மாணவச்சிப்பாய் படையணிகளை பாடசாலைகள் தோறும் உருவாக்கி அதனை நடைமுறைப்படுத்தியும் வருகின்றது.
மாணவர்களை நவீன சவால்கள் மற்றும் போதைப்பொருள் பாவனை,மன அழுத்தங்களில் இருந்து விடுபட வைத்தல்,உடல் வலிமை,மன வலிமையை மேம்படுத்தி நாட்டுக்கு நற்பிரஜையாக மாற்றியமைத்தல் எனும் தொனிப்பொருள்களில் அமைந்த இந்த ஒரு நாள் பயிற்சி பாசறை அம்பாறை, 17 வது படைப்பிரிவின் கட்டளை இடும் அதிகாரி லுதினன் கேர்ணல்
டப்ளியு.எல்.பி.விஜேசுந்தர வின் தலைமையில் கடந்த 21.03.2023 அன்று
அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
அம்பாறை 17 ஆவது படைப்பிரிவின் ஜி. கம்பனி கடேற் மாணவர்களுக்கான
ஒரு நாள் பயிற்சிப்பாசறை அம்பாறை 17 ஆவது படைப்பிரிவின் பயிற்சி அதிகாரி கெப்டன் எம்.ரி.நௌஸாத் வபி இன் வழிகாட்டலில், அக்கரைப்பற்று திருக்கோவில் வலயங்களுக்கு பொறுப்பான கொம்பனி கொமாண்டர் லெப்டினன் ஏ.எம்.எம். கியாஸ் இன் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இப்பயிற்சி பாசறையில் அக்கறைப்பற்று மற்றும் திருக்கோவில் கல்வி வலயங்களை சேர்ந்த பாடசாலைகளின் கடேற் மாணவர்கள் பங்குபற்றினர்.
இப்பயிற்சி நிகழ்வுக்கு அக்கறைப்பற்று முஸ்லீம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலை அதிபர் ஏ.பி.முஜீன், அட்டாளைச்சேனை
தேசிய பாடசாலை அதிபர் ஏ.சி.எம்.ஹரிஸ், மற்றும் ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தின் அதிபர் அஷ்ஷெய்க் யு.கே.அப்துர் றஹீம் ஆகியோர் நேரடியாக வருகை தந்து மாணவர்களை உட்சாகமூட்டினர்.
0 comments :
Post a Comment