அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் கொழும்பு மற்றும் கண்டி மாவட்டங்கள் பள்ளிவாசல்கள் பெட்ரேசன் இணைந்து பாக்கிஸ்தானில் ஏற்பட்ட வெள்ள நிவாரணத்திற்காக சேகரித்த 10,629.464.00 ருபாவை பாக்கிஸ்தான் உயா்ஸ்தானிகரிடம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாருக் புர்க்கியிடம் கையளித்தனா் . இந் நிகழ்வு வெளிநாட்டு அமைச்சா் அலி சப்ரி முன்னிலையில் அமைச்சில் வைத்து நடைபெற்றது.
இந் நிகழ்வில் உலமா சபைத் தலைவா் அஷ்சேக் றிஸ்வி முப்தி, செயலாளா் அஷ்சேக் அர்கம் நுார்ஆமித், உபதலைவா் அஷ்ஷேக் ஒமர்டீன், உதவிச் செயலாளர் எம்.எஸ்.எம். தாசிம், அஷ்ஷேக் எம்.எச்.எம். பவாஸ் (சமுகசேவை இணைப்பாளா்- கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் அமைப்பின் தலைவா் அஸ்லம் ஒஸ்மான், செயலாளா் எஸ.ஏ.கரீம் கண்டி மாவட்டச் பள்ளிவாசல்கள் சாார்பாக தலைவா் கே.ஆர்.ஏ சித்தீக், எம்.ஜே.எம். றிஸ்வி மற்றும் பாக்கிஸ்தான கௌரவ கவுன்சிலா் அப்சல் மரிக்காா் உட்பட செயற்குழு உறுப்பினர்கள் பள்ளிவாசல்கள் உறுப்பினர்கள் இணைந்து வெள்ள நிவாரத்திற்கான காசோலையை பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகரிடம் கையளித்தனா்.
0 comments :
Post a Comment