அம்பாறை, இறக்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதினாபுரம் அக்கரைப்பற்று பிரதான வீதி சந்தை அருகில், இரண்டு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரியவிபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமாகிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து இன்று (22) காலை இடம் பெற்றதுடன் இறக்காமம் 4ம் பிரிவை சேர்ந்த அமீர் என்பவரும், மற்றொரு நபரும் இதில் பாரிய காயங்களுடன் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இவ் விபத்தில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இறக்காமம் 4ம் பிரிவை சேர்ந்த அமீர் என்பவர் உயிரிழந்துள்ளார்.
இவரது உடலம் அம்பாறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment