கிராம சேவையாளரான இவர் கடந்த தசாப்த காலத்துக்கும் மேலாக பொதுநல செயற்பாடுகள், மக்கள் நலன் சார்ந்த வேலை திட்டங்கள் ஆகியவற்றில் முனைப்புடன் ஈடுபட்டு வந்திருக்கின்றார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் அடக்கு முறை, பொருளாதார அழுத்தம் ஆகியவற்றுக்கு எதிராக கொழும்பில் கடந்த வருட இறுதியில் நடத்தப்பட்ட மக்கள் போராட்டங்களில் இவரும் பங்கேற்றார்.
இதை தொடர்ந்து இவருடைய வீடு, அலுவலகம் ஆகியவற்றுக்கு மர்ம நபர்கள் வந்து உயிர் அச்சுறுத்தல்கள் விடுத்து உள்ளனர் என்று முறைப்பாடுகள் பதிவாகி உள்ளன.
குறிப்பாக இவருடைய புகைப்படத்தை காட்டி அயலவர்கள், நண்பர்கள் போன்றோரிடம் இவரின் நடவடிக்கைகள், நடமாட்டங்கள் தொடர்பாக கடந்த நாட்களில் விசாரித்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தம்பியப்பா தயானந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார்.
0 comments :
Post a Comment