ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் முதியோர் மற்றும் விஷேட தேவையுடையவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் பிரதேச செயலாளர் வி.தவராஜாவின் வழிகாட்டலில் தொடர்ந்தேர்ச்சியாக பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
அதன் அடிப்படையில் முதியோர் மற்றும் விஷேட தேவையடையவர்களுக்கு முப்பத்தொன்பது லட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள், சுகாதார பொருட்கள் என்பன இன்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கெல்ப்பேஜ் நிறுவனத்தின் (HelpAge Sri Lanka) அனுசரனையில் இடம் பெற்றது.
ஓட்டமாவடி பிரதேச செயலக சமுக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஏ.சி.நஜிமுதீன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கெல்ப்பேஜ் நிறுவனத்தின் (HelpAge Sri Lanka) திட்ட தலைமை அதிகாரி எம்.எஸ்.ஷமிந்த டி சில்வா, கெல்ப்பேஜ் நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஜே.எம்.தாருக்க தனஜய பண்டார மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதன் போது நூறு பயனாளிகளுக்கு இருபதாயிரம் ரூபா பெறுமதினான உலர் உணவு பொருட்களும் பதினைந்து பேருக்கு பதினையாயிரம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களும் ஆறு பேருக்கு ஊன்றுகோல்களும் வழங்கி வைக்கப்பட்டன.
0 comments :
Post a Comment