வரலாற்றுத் தடையம் பதித்துச் சென்ற ஒலுவில் ஹம்றாவின் கௌரவம்.



எம்.எல்.பைசால் (காஷிபி)-
ம்றாவின் கௌரவம் எனும் தலைப்பில் 2023/03/05 ஆம் திகதி ஒலுவில் அல்ஹம்றா பாடசாலை சமூகத்தினால்

சர்வ கலாசாலைக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களையும் மற்றும் ஆசிரியர்களையும் கௌரவித்து பாடசாலை அதிபர் யு.கே.அப்துர் றஹீம் அவர்களின் தலைமையில் பாராட்டு வைபவம் ஒன்று நடாத்தப்பட்டது.

அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தின் அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தை சுமார் 30 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைத்து மீள் பாவனைக்கு தந்துதவிய ஒலுவில் பிரதேசத்தின் பிரபல சமூக சேவகர், கொழும்பு "லக்கிபெக்" நிறுவனத்தின் உரிமையாளர் சகோதரர் ஏ.எல். சஹீத் ஹாஜி அவர்களை பிரதம அதிதியாகக் கொண்டு நடாத்தப்பட்ட மேற்படி வைபவத்திற்கு கல்விமான்கள்,கல்வி அதிகாரிகள், பிரமுககர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் மற்றும் பழைய மாணவர்கள் என பலரும் சமுகம் தந்து சிறப்பித்தனர்.

2016 ஆம் ஆண்டு முதல் இன்று வரை அல்ஹம்ரா மகா வித்தியாலத்தில் கல்வி கற்று சர்வ கலாசாலைக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களையும் மற்றும் ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிப்பதற்காக வேண்டி ஷஹீது ஹாஜி அவர்களே தனது நிதியினை ஒதுக்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒலுவில் அல்-ஹம்றா வரலாறு காணாத பிரமாண்டமான அமைப்பில் மேற்படி விழா ஆரம்பமானது.
மாணவர்களின் பேண்ட் வாத்தியம் முழங்க, சாரணர்,கடெட் மற்றும் முதலுதவி first aid அணியினர் ஒன்றிணைந்து அதிபர், பிரமுகர்கள், ஆசிரியர்கள், மற்றும் கௌரவம் பெறும் மாணவர்கள் என அனைவரையும் ஒலுவில் பிரதான வீதியில் இருந்து மகா வித்தியாலயம் வரை ஊர்மக்கள் பாதையின் இருமருங்கிலும் புடைசூழ வரவேற்று பாடசாலையின் சமூகத்தின் சேவைக்கு கௌரவிப்புச் செய்த சிறப்பு மிக்க விழாவாக இது அமைந்தது.

இவ்விழாவின் போது மீள் புனரமைப்புச் செய்யப்பட்ட ஆராதனை மண்டபம் உத்தியோக பூர்வமாக கையளிப்புச் செய்யப்பட்டதுடன் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் அதிதிகள் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப் பட்டனர்.

விஷேடமாக இவ்விழா அப்துர் ரஹீம் அதிபர் அவர்களின் தலைமையில் கீழ் இப்பாடசாலை உள்ள காலப் பகுதியில் சர்வகலாசாலைக்குத் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களை கௌரவிக்கும் ஏற்பாடாக அமைந்திருந்தது.
90 களின் பிற்பட்ட காலங்களில் ஒலுவில் கிராமத்தின் சர்வகலாசாலைகளில் கற்கின்ற மாணவர்கள் அண்ணளவாக 10 க்கும் குறைந்த தொகையினராகவே இருந்தனர்.ஆனால் இப்பாராட்டு விழாவின் போது 100 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகத்தில் கற்கின்ற மாணவ மாணவிகள் பெற்றோர்கள் சகிதம் அரங்கு நிறைய காட்சியளித்தமை மனநிறைவாக இருந்தது.

ஒலுவில் கிராமம் எனும் தாய் அகமகிழ்ந்தாள்.
பல தரப்பாரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.

அதிபர், ஆசிரியர்களின் அற்பணிப்பும், ஈடுபாடும் மாணவர்களின் அடைவுகள் மூலம் சிறப்பித்துப் பார்க்கப் பட்டது.

மாணவர்கள் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்ட இவ்விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்த ஷஹீத் ஹாஜி தான் இப்பாடசாலைக்கு குறிப்பிட்ட தொகையினை அன்பளிப்புச் செய்தமையானது தனது ஊழியர்களின் முயற்சியும், ஈடுபாடும் காரணமாக அமைந்தன, தனக்கு கிடைக்கும் நன்மையில் அவர்களும் பங்குதாரர்கள் எனத் தெரிவித்து அவர்களுக்காக பிரார்த்திக்குமாறு வேண்டியதுடன் சபையோர் முன்னிலையில் அவர்களை அழைத்து நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்துச் சிறப்பித்தமை சஹீத் ஹாஜி பற்றிய உயர்வான எண்ணத்தை ஏற்படுத்தியது.
பாடசாலையின் கலைத்திட்டத்திற்கு உட்பட்ட சகல செயற்பாடுகளிலும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் மாவர்களை பாடசாலையின் சமூகத்திற்கு அடிப்படை சொந்தக் காரர்களான பெற்றோர்கள் முன்னிலையில் வருடாந்தம் "பெற்றோர்கள் தினம்" எனும் பெயரில் பாராட்டு விழாக்களை எதிர்காலங்களில் நடாத்துவதற்கு பாடசாலை சமூகம் முன்வரல் அவசியமாக் கொள்ளப்படுகிறது.

பெற்றார் சங்கம் மற்றும் பழைய மாணவர்களை பங்குதாரர்களாகக் கொண்டு மேற்போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய முன்வரல் வேண்டும்.

பாடசாலையில் இது போன்ற நிகழ்ச்சிகளின் போது உரிய மாணவர்களின் பெற்றோர்கள் சபையோர் முன்பாக அறிமுகப் படுத்தும் சம்பிரதாயங்கள் பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்படல் வேண்டும்.

நூற்றாண்டு தாண்டி பயணிக்கும் அல்ஹம்றாவில் 79/80 காலப் பகுதியில் உருவான உயர்தர வகுப்புகள் மூலம் கல்வி கற்று 170க்கும் மேற்பட்டவர்கள் பல்கலைக் கழகம் சென்றிருக்கின்றார்கள் என்ற செய்தி எங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியே.

அல்ஹம்றாவின் வளர்ச்சியில் பங்களிப்புச் செய்யும் அனைத்து உள்ளங்களுக்கும் அல்லாஹ் நற்கூலி கொடுப்பானாக.
அல்ஹம்றா சகல துறைகளிலும் பிரகாசிக்க பிரார்த்திக்கிறேன்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :